230. அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் கோயில்
இறைவன் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவி காமாட்சியம்மை
தீர்த்தம் தாணு தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருக்கச்சிஅனேகதங்காவதம், தமிழ்நாடு
வழிகாட்டி இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் புத்தேரி தெருவில் கைலாசநாதர் கோயிலுக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கச்சபேஸ்வரர் கோயில் வழியாக செல்ல வேண்டும்.
தலச்சிறப்பு

Kachi Anegam Gopuramஒரு சமயம் விநாயகர், முனிவர்களுக்குத் தொல்லைக் கொடுத்து வந்த கேசி என்னும் அசுரனை அழிக்க, இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டுச் சென்று அவனை வென்றார். விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இத்தலம் 'அநேகதங்காவதம்' என்று அழைக்கப்படுகிறது. விநாயகருக்கு அநேகதங்காவதர் என்று ஒரு பெயர் உண்டு. இமயமலையில் ஒரு அநேகதங்காவதம் உள்ளதாலும், இது கச்சியம்பதியில் உள்ளதாலும் 'கச்சி அநேகதங்காவதம்' என்று வழங்கப்படுகிறது.

Kachi Anegam Praharamமூலவர் 'அநேகதங்காவதேஸ்வரர்' பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அழகான மூர்த்தி. காஞ்சிபுரத்தில் 'காமாட்சி' அம்மனுக்கு தனிக் கோயில் உள்ளதால் இங்கு உள்ள எந்த சிவன் கோயிலுக்கும் அம்மன் சன்னதி கிடையாது.

ஏக பிரகாரமான இக்கோயிலில் பிரகாரத்தில் விநாயகப் பெருமானும் மிகப் பெரிய திருவுருவில் தரிசனம் தருகின்றார். வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யரும் தரிசனம் தருகின்றார்.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com